மலர் வியாபாரிகள் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் முகாம்

கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நல சங்கம் மற்றும் காஜா பிளவர் டிஸ்கோ டெக்கரேட்டர்ஸ் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.

நாளை ஓணம் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் கோவையில் பூக்கள் காய்கறிகள் மற்றும் பூஜை பொருட்களின் வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளது. இதனால் பூ மார்க்கெட்டிற்கு பொதுமக்கள் அதிகம் வருகை தருவதால் கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நல சங்கம் மற்றும் டிஸ்கோ பிளவர் டிஸ்கோ டெகரேட்டர்ஸ், சார்பாக பூ மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் செயலாளர் அன்சாரி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் டிஸ்கோ காஜா, முன்னிலை வகித்தா.ர் சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசங்களை வழங்கி பேசினார்.

அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறும், ஒரே இடத்தில் அதிகமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் துணை செயலாளர் சாமிநாதன் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர.