தேடல் ஆல்பம் சாங் வெளியீட்டு விழா: எஸ்.பி. வேலுமணி வெளியிட்டார்

தேடல் தமிழ் ஆல்பம் சாங் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. இந்த ஆல்பதினை முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி. வேலுமணி வெளியிட்டார்.

இந்த தமிழ் ஆல்பதை ஜென்சிர் முஹம்மது இயக்கியுள்ளார். தேடல் தமிழ் ஆல்பம் முழுவதும் கோவை பகுதியில் உள்ள கரடிமடை, சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆல்பத்திற்கு இசைமைப்பாளர் பைசல் இசை அமைத்துள்ளார். சித்தாரா கிருஷ்ணா இப்பாடலை பாடியுள்ளார்.

இதில் நடிகர் விஷ்ணு பாலகிருஷ்ணன், நடிகை ஆசிஹா அசோகன், ரோட்டாரி எஸ். மணிகண்டன், கே.ஜி. ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.