சமூக பணியாளர்களை கவுரவிக்கும் ‘மனிதநேய விருது’

கொரோனா பேரிடர் காலத்தில் சமூக பணியாற்றியவர்ளுக்கு கோவை மனித நேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக மனிதநேய விருது வழங்கப்பட்டது.

கொரோனா பேரிடர் காலத்தில் பாதிப்படைந்த பல்வேறு நிலை சார்ந்தவர்களுக்கு மனித நேயத்தோடு உதவி புரிந்த சமூக பணியாளர்களை கவுரவித்து விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. மனித நேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற இதில் டிரஸ்டின் நிறுவன தலைவர் சுலைமான் தலைமை வகித்தார். ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முகம்மது உமர், ஜபருல்லா, முன்னிலை வகித்த இதில் பால்ராசு வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவகணேஷ், சென்னை மொபைல்ஸ் சம்சுஅலி, அனுபவ் ரவி, தி.மு.க.இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், சௌகத் அலி, ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், கோவை, ஈரோடு, சத்தி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சமூக சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் மனிதநேய விருது வழங்கி கவுரவிக்கபட்டனர்.

தொடர்ந்து அனைவருக்கும் ஸ்ரீதேவி சில்க்ஸின் சிறப்பு பரிசு கூப்பன் வழங்கப்பட்டது.