“ஆறாக்குளம் பகுதியில் உருவாகி வரும் பள்ளி விரைவில் துவங்கப்படும்”

கோவையை அடுத்த ஆறாக்குளம் பகுதியில் அரிமா சங்கம் சார்பாக மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கென மூன்று ஏக்கர் பரப்பளவில் உருவாகி வரும் பள்ளி விரைவில் துவங்கப்படும் என 324 C மாவட்ட அரிமா சங்கத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்றுள்ள நடராஜன் தெரிவித்துள்ளார்.

அரிமா சங்கம் 324 C.மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சுந்தரபுரம் பகுதியில் உள்ள லிண்டாஸ் கார்டன் மகாலில் நடைபெற்றது. விழா தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இதில், 2021-22ம் ஆண்டிற்கான புதிய ஆளுநர் நடராஜன் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்று கொண்டார். முதல் துணை நிலை ஆளுநராக ராம்குமார், இரண்டாம் துணை நிலை ஆளுநராக ஜெயசேகரன் ஆகியோரும், புதிய கேபினெட் உறுப்பினர்களாக சூர்ய நந்தகோபால், கோபால கிருஷ்ணன், உதயகுமார், பிரகாஷ், ரவிச்சந்திரன் ஆகியோரும் பதவியேற்றனர்.

மேலும் மண்டல, வட்டார தலைவர்கள் என புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் கே.ஜி.ராமகிருஷ்ணமூர்த்தி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் இயக்குனர்கள் ஜி.ஆர்.ராமசாமி, தனபாலன், மற்றும் கூட்டு மாவட்ட தலைவர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, ஏழை தொழிலாளர் குடும்பத்தினர்களுக்கு கல்வி உதவி தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் நடராஜன், அரிமா சங்கம் சார்பாக பல்வேறு சமுதாய சேவை பணிகள் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், ஆறாக்குளம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பள்ளி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தெரிவித்தார்.

விழாவில்,தமிழ்நாடு ஜி.எல்.டி.ஒருங்கிணைப்பாளர் மதனகோபால்,முன்னாள் ஆளுநர்கள் டாக்டர் பழனிசாமி, ஜீவானந்தம், சாரதாமணி, ஆறுமுகமணி, சண்முகம், காளிச்சாமி, கருண பூபதி மற்றும் 324 அரிமா மாவட்டத்தின் செய்தி தொடர்பாளர் செந்தில் குமார்,காவேரி பைப் மற்றும் குழுமங்களின் தலைவர் வினோத் சிங், மற்றும் அர்ஜூன் உட்பட பல்வேறு அரிமா மாவட்டங்களின் நிர்வாகிகள், மண்டல, வட்டார தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.