சி.எஸ்.ஆர் நர்சிங் ஹோமில் அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஆர் நர்சிங் ஹோமில் அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்க, சி.எஸ்.ஆர் மருத்துவமனை ஒரு அதிநவீன ஆக்சிஜன் உற்பத்தி கருவியை நிறுவியுள்ளது. இது சிஎஸ்ஆர் நல அறக்கட்டளை நன்கொடையாக வழங்கி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. நிமிடத்துக்கு 100 லிட்டர் தயாரிக்கும் இந்த கருவியை செர்ரி பிரிசிஸன் வடிவமைத்துள்ளது. மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜனை இதிலிருந்து பெற முடியும்.

இந்த அதிநவீன புதிய ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம், சி.எஸ்.ஆர். மருத்துவமனையில், கோவிட் தொற்று காலத்தில் இந்த கருவியை நிறுவி துவக்கியுள்ளது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.எஸ்.ஆர். நர்சிங் ஹோம், காந்திபுரத்தில் 50 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை. இது மட்டுமின்றி, கோவிட் சிகிச்சைக்கென ராம்நகர் மற்றும் ராமநாதபுரத்தில் இரண்டு தனி சிஎஸ்ஆர் தொற்று நோய் சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.