மேற்கத்திய ஆடைகளுக்கான பிரத்யேக ஷோரூம்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பெண்களுக்கான  மேற்கத்திய ஆடைகள் மற்றும் அழகு சாதன பொருட்களுக்கான பிரத்யேக ஷோரூம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் பல முன்னணி  நிறுவனங்களின் கிளைகள் துவங்கிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற தி டீன்ஸ் ஷோ ஆப்  எனும் மேற்கத்திய ஆடைளுக்கான மையம் கோவையில் தனது கிளையை துவக்கியது.

கோவை ஆர்.எஸ்.புரம் ஐ பிளானெட் அருகில் தொடங்கப்பட்ட இங்கு பல்வேறு நாடுகளில் பெண்களுக்கான பிரபலமான மேற்கத்திய ஆடைகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கோவையில் துவங்கப்பட்ட தி.டீன்ஸ் ஷோ ஆப் ஷோரூம் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஜே.ஆர்.டி.குழுமங்களின் தலைவர் ஜே.ராஜேந்திரன் மற்றும் அவரது துணைவியார் ஆஷா ராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.