8 நிறங்களில் அறிமுகமாகும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

வெள்ளை, கருப்பு, மஞ்சள், சிவப்பு உட்பட 8 நிறங்களில் ஓலாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனம் தனது முதல் இருசக்கர வாகனத்தை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. மேலும், மின்சார இருசக்கர வாகனத்திற்காக உலகின் மிகப்பெரிய சார்ஜிங் நெட்ஒர்க் அமைப்புகளையும் உருவாக்க முடிவு செய்து அதற்கான பணிகளையும் முடித்துள்ளது.

இம்மாதத்தின் இறுதியில் ஓலா தனது ஸ்கூட்டர் விற்பனையை தொடங்கிய நிலையில், இன்னும் சில நாட்களில் ஓலாவின் வாகனங்கள் இந்திய சாலைகளில் பயணம் செய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலுவான ஹைப்பர் சார்ஜிங் நெட்ஒர்க் மூலமாக 18 நிமிடத்தில் வாகனத்தின் 50 விழுக்காடு பேட்டரி திறன் பூர்த்தி செய்யப்படும் என்றும், சார்ஜிங் நெட்வொர்க் அமைப்புகள் 400 நகரங்களில் ஒரு இலட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுடன் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓலா நிறுவனம் சுமார் 8 நிறத்தில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. வெள்ளை, கருப்பு, மஞ்சள், சிவப்பு, வான நீலம், மை நீலம், சாம்பல், வெளிறிய ரோஸ் நிறத்தில் உள்ள ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களை ரூ.499 கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.