கோவில் பூசாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை

அரசு கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோவில்களில் பூஜை செய்யும் பூசாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகரம் மற்றும் கிராமப்புற பகுதியில் அரசு கட்டுப்பாடு இல்லாத ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளது. அங்கு பூஜை செய்யும் விசுவ ஹிந்து பரிஷத்தின் பூசாரிகள் பேரமைப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தமிழக முதலமைச்சர், கோவிலில் வருமானமின்றி சேவை பணியாற்றி வரும் பூசாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும், ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

மேலும், அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டுமெனவும், கிராம பூசாரிகளுக்கு நல வாரியம் அமைத்து தரக்கோரியும், கிராம கோவிலுக்கு தீபம் ஏற்ற எண்ணெய் மற்றும் பூஜை பொருட்கள் வழங்க வேண்டும் எனவும், மேலும் சொந்த வீடு இல்லாத பூசாரிகளுக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.