தமிழில் அதிகரிக்கும் அந்தாலஜி படங்கள்

அந்தாலஜி படங்கள் என்பது நான்கு இயக்குனர்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட இயக்குனர்கள் ஒரே தலைப்பில்  வெவ்வேரு கதைகளை இயக்குவது தான் அந்தாலஜி என்று குறிப்பிடப்படுகிறது.

அந்தவகையில் தற்பொழுது நெட்பிளிக்ஸ் தளத்தில் அந்தாலஜி வகையில் “நவரசா” திரைப்படம் வெளியாவதாக கூறப்பட்ட உடன் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதில் தலைப்பிற்கு ஏற்ப 9 விதமான கதைக்களத்தில் 9 இயக்குனர்கள், மிகப்பெரிய திரை நடிகர்கள் என இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.

அந்தாலஜி வகை படங்கள் தமிழ் சினிமாவில் ஏற்கனவே அறிமுகமாகியுள்ளது. புத்தம் புது காலை, சில்லுக்கருப்பட்டி, குட்டி லவ் ஸ்டோரி, பாவக்கதைகள் போன்ற படங்கள் வரிசையில் தற்பொழுது 9 இயக்குநர்களால் உருவாக்கப்படும் நவரசா பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.