பான் கார்டை தொலைத்துவிட்டால் அடுத்து என்ன செய்வது ?

உங்களுடைய பான் கார்டு அட்டை தொலைந்து விட்டால் கவலை வேண்டாம் 5 நிமிடத்தில் இ- பான் கார்டு நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

பான் கார்டு என்பது முக்கியமான ஒரு ஆவணமாக கருதப்படுகிறது காரணம் வருமான வரி செலுத்துவது, வங்கியில் புதிய கணக்கு துவங்குவது, பணப்பரிவர்த்தனை மேற்கொள்து, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பெறுவது, பென்ஷன் திட்டம், வங்கி பரிவர்த்தனைகள், பணம் தொடர்பான அனைத்திற்கும் இந்த பான் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வருமான வரித்துறை மூலம் வழங்கும் இந்த பான் கார்டுக்கு 10 எண் கொண்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் மேலும் நீங்கள் இந்த கார்ட்டை ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியும்.

இப்படி பல்வேறு வகையில் உதவும் பான் கார்டை தொலைத்துவிட்டால் அடுத்து என்ன செய்வது..? உடனடியாக அவசர தேவைக்காக புதிய பான் கார்டு பெறுவது எப்படி என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.

தற்பொழுது இந்தியாவில் வருமான வரித்துறை வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது அதன்படி உங்களுக்கு இ-பான் கார்டு வழங்கப்படுகிறது.

இ-பான் பெறுவதற்கு நீங்கள் முதலில் https://www.incometax.gov.in/iec/foportal என்ற வருமானவரித்துறை இணையதளத்தில் லாகின் செய்யவும் பிறகு நீங்கள் ‘Instant e-PAN’ என்ற ஆப்சனை தேர்வு செய்யவும் அடுத்ததாக ‘New e-PAN’ என்பதை கிளிக் செய்யவும் தற்போது பான் எண்ணை பதிவிடவும் ஒருவேளை நீங்கள் பான் எண்ணை மறந்துவிட்டால், ஆதார் எண்னை பதிவு செய்யலாம் விதிமுறைகளை படித்து பார்த்து ‘Accept’ கொடுக்கவும். தற்போது உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை பதிவு செய்யவும் பிறகு ‘Confirm’ என்பதை தேர்வு செய்யவும். விண்ணப்பதாரரின் இ-மெயில் ஐடிக்கு இ-பான் கார்டு PDF Formatல் அனுப்பப்படும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன் படுத்தி கொள்ளலாம்.

உடனடியாக பான் கார்டு பெறுவதற்கு கட்டணங்கள் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆதார் எண் இருந்தால் போதும் பான் கார்டு பெற்றுவிடலாம். அது மட்டுமின்றி நீங்கள் இந்த பான் கார்டினை பெற tin – NSDL அல்லது UTIITSL என்ற இணைய தளங்களிலும் பதிவிற்றக்கம் செய்து கொள்ளலாம்.