என்றும் மகேந்திர சிங் தோனி!

கிரிக்கெட் இந்தியர்கள் அனைவராலும் மிகவும் விரும்ப கூடியதாக உள்ளது. கடந்த 20 ஆண்டுக்கான கிரிக்கெட் மீது கண் மூடி தனமான நம்பிக்கையும், காதலும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டி இன்றும் அனைவரின் மனதில் நீங்காது இருக்கும்.

உலக கோப்பை இறுதி போட்டியில் முதலில் களமிறங்குய சேவாக், சச்சின் தனது விக்கெட்டை இழந்தவுடன் பலரும் வெறுப்பில் டிவி யை ஆப் செய்துவிட்டு சோக முகத்துடன் தெருக்களில் நடமாடினர். சிறிது நேரம் கழித்து தோனி, தோனி என்ற குரல் மைதானத்தில் ஒலிக்கும் சத்தத்தை டிவியில் கேட்டு பலரும் மீண்டும் தங்களது டிவி முன் அமர்ந்தனர்.

பொலிவிழந்த இந்தியர்களின் முகங்களில் தோனியின் எதார்த்த தோரணை பலருக்கும் ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையை விதைத்தது. அந்த நம்பிக்கையும் பலித்தது. ஆட்டத்தில் கடைசி நிமிடம் இன்னும் எத்தனை உலக கோப்பை இந்தியா வென்றாலும், அந்த ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் தோனி அடித்த அந்த ஷாட் பௌண்ரியை நோக்கி பறந்த அந்த பந்து அதை பார்த்து கொண்டே அசையாமல் நின்று கொண்டிருந்த டோனி, இவர்களை கண்டு மூச்சு விட கூட மறந்த ரசிகர்கள் என அந்த ஆட்டமே விறைத்து போக ஒரு சிக்ஸ் அதனுடன் மைதானமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. சச்சினின் கடைசி போட்டி என்பதால் அதனை அவரிடம் கொடுத்து மற்றவர்கள் சச்சினை தொழில் தூக்கி வலம் வந்த பொழுதில் இதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஓரமாக நடந்து வந்த காட்சி யார் மறக்க முடியும்.

இந்தியாவில் சினிமா நட்சத்திரங்களை தாண்டி அவர்களுக்கு இணையான ஒரு முகம் அனைவரின் மனதிலும் உள்ளது என்றால் அது நிச்சயம் தோனியாக தான் இருக்கும். இவரது வாழ்க்கை கதையை இவர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போதே படமாக எடுத்து அது பெரும் வெற்றியை பெற்றது இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுக்க வைத்தது. இன்றும் தோனியை விளையாடும் போட்டிகளை மட்டும் காணும் பலரும் உள்ளனர். இவரது ஒய்வு குறித்த அறிக்கையை கேற்க யாரும் தயாராக இல்லை என்பது நிச்சயமான உண்மை.

ஒரு பேட்ஸ்மேனாகவும், ஒரு அணியின் தலைவனாகவும் தனது பங்கை 100 சதவிகிதம் எந்தவித வெற்றி தோல்வியை சந்தித்தாலும் ஒரே மாதிரி கடந்து வந்ததே இவரின் மாபெரும் வெற்றி.   மற்ற சாதாரண மனிதர்களும், தலைவர்களும் இவரிடமிருந்த கற்று கொள்ள வேண்டியது இவரின் எளிமை ஒன்றே. என்றும் தலைவனாக, எதிலும் தல தோனி என்பதே தோனி ரசிகர்களின் மாறாத வசமாக உள்ளது.

இன்று 40வது பிறந்த நாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர், நண்பர்கள், பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் நாமும் வாழ்த்துவோம்.