ஆவின் நிறுவனத்தில் வேலை

ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் திருச்சி மாவட்ட ஆவின் கிளையில் காலியாக உள்ள 38 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.

பணி விபரங்கள்:

Technician (Operation) – 1

Technician (Refrigeration) – 1

Technician (Electrical) – 4

Senior Factory Assistant (SFA) – 32

வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Refrigeration, Airconditioning/Fitter / Dairy Mechanic / Electrician / Wireman / Instrumentation பிரிவில் ஐடிஐ அல்லது பொறியியல் துறையில் Mechanical / Electrical and Electronics / Instrumentation and control engineering பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Senior Factory Assistant (SFA) பணிக்கு, பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். Technician பிரிவிற்கு Electrician பிரிவில் ஐடிஐ முடித்து Lineman / Wireman “B” License அல்லது Diploma in Electrical and Electronic engineering முடித்து “C” License பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 16.03.2018. மேலும் விபரங்களுக்கு http://aavinmilk.com/hrerdapp250118.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

தினமணி.காம்