எம்பயர் இன்ஜினியர்ஸ் சார்பில் முதியோர் காப்பகத்திற்கு நிவாரணம்

உக்கடம் பகுதியில் உள்ள ஹெல்பிங் ஹார்ட்ஸ் முதியோர் காப்பகத்திற்கு எம்பயர் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூபாய் 79 ஆயிரம் மதிப்பில்  கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, உக்கடம், கே.என்.ஜி புதூர், பூசாரிபாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் எம்பயர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் சார்பாக 70 ஆக்சிமீட்டர், 3 ஆயிரம் முகக் கவசங்கள் ஆகியவற்றை எம்பயர் இன்ஜினியர்ஸ் நிர்வாக இயக்குனர் மூர்த்தி, ஹெல்பிங் ஹார்ட்ஸ் நிர்வாக அறங்காவலர் கணேஷிடம் வழங்கினார்.

இதில் காவேரி குரூப் ஆப் கம்பெனி இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர், ஹோம் பார்க் கிரியேடிவ் ஹவுஸஸ் நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் ஏ.ஆர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.