ஒன்பிளஸ் நார்டு CE 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒன்பிளஸ் பிராண்ட், ஒன்பிளஸ் நார்டு தயாரிப்பு வரிசையில் புதிய சேர்ப்பினை அறிமுகம் செய்துள்ளது. ஒன் பிளஸின் நிறுவனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பீட்லாவ் கூறுகையில், ஒன்பிளஸ் நார்டு CE 5G நார்டு ஸ்மார்ட்போன் வழங்குபட்டியலின் புதிய சேர்ப்பான இது, நார்டு அனுபவத்தின் முக்கிய அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆற்றமிக்க அம்சங்களை இன்னும் இலகுவான விலையில் வழங்குகிறது. அனைத்தும் அழகான வடிவமைப்பில் அடங்கியுள்ளன. பன்முகத்தன்மை வாய்ந்த 64 MP டிரிபிள் கேமரா அமைப்பு, 90 Hz ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே, ஆற்றல் மிக்க ஸ்னாப்டிராகன் 750G 5G பிராசஸர் மற்றும் மேம்படுத்தப்பட்ட வார்ப் சார்ஜ் 30T பிளஸ் உள்ளிட்ட ஒன்பிளஸின் பிரத்தியேகமான மற்றும் சீரான Oxygen OS 11 உள்ளிட்ட சிறந்த வர்க்கவன் பொருள் அம்சங்களை நார்டு CE ஒருங்கிணைத்து ஒரு அருமையான அன்றாட பயனர் அனுபவத்தை வழங்குகிறது.” என்று கூறினார்.

ஒன்பிளஸ் நார்டு CE 5G ஒரு பெரிய அளவிலான 4,500mAh பேட்டரியுடன் வருகிறது, நார்ட்CE Qualcomm® Snapdragon™ 750G 5G மொபைல் இயங்கு தளத்தால் இயக்கப்படுகிறது, இது அதன் முன்னோடியை காட்டிலும் 20% CPU மற்றும் 10% GPU மேம்பாட்டினை வழங்குகிறது, Kryo 570 CPU மற்றும் Adreno 619 GPU மேம்பட்ட AI இன்ஜின், மேம்பட்ட கேமிங் முதல் மேம்பட்ட குரல் அரட்டை வரை பயனர்களுக்கு நம்பமுடியாத சீரான மற்றும் உள்ளார்ந்த அனுபவத்தை வழங்குகிறது. இன்று வரை ஒன்பிளஸின் வேகமான மற்றும் மிகவும் விரைவான மென்பொருளாகத் திகழும் Oxygen OS 11 நிறுவப்பட்டு நார்டு CE வெளி வருகிறது. 6GB ரேம் 128GB ராம் விலை ரூ .22,999, 8GB ரேம் 128GB ராம் ரூ .24,999, 12GB ரேம் 256GB GB ராம் ரூ .27,999 விலைகளில் கிடைக்கும்