கே.பி.ஆர் கலை கல்லூரியில் இணையவழி கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறை மற்றும் நிதி சங்கம் சார்பில் “வெபினார் ஆன் பர்சனல் ஃப்ன்னால் டூரிங் பெண்டிமிக்” (WEBINAR ON PERSONAL FINANCE DURING PANDEMIC) எனும் தலைப்பில்  இணையவழி கருத்தரங்கம் (14.6.2021) நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக வெல்த் கன்சல்டன்ட் சதிஷ்குமார் கலந்து கொண்டு தமது உரையில், செல்வ மேலாண்மை என்பது நிதி மேலாண்மை மற்றும் முதலீடு மேலாண்மை உள்ளடக்கியது. மேலும், எவ்வாறு நிதியை மேலாண்மை செய்வது என்றும், உன்னிடம் எவ்வளவு உள்ளது என்பது பற்றித் தெரிந்து செயல்படுதல் வேண்டும் எனக்கூறினார். எப்பொழுதும் பணத்தை வீணாக்காதே என்று விளக்கியதுடன், முதலீடு, அதன் வகைகள் குறித்தும் விளக்கினார். முதலீட்டின் முக்கிய வகைகளான நிலையான வருமானம், பங்கு வருமானம், தங்க முதலீடு, மனை முதலீடு மற்றும் பரஸ்பர நிதி, ஓய்வூதியத் திட்டம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்.

நிகழ்வில் வணிகவியல் துறை முதன்மையர் குமுதாதேவி முன்னிலை வகித்ததோடு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் தனலட்சுமி வரவேற்புரை வழங்கி நிகழ்வை ஒருங்கிணைத்தார். வணிகவியல் துறை, நிதி சங்கம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் துறை சார் புல முதன்மையர்கள் பேராசிரியர்கள் மற்றும் வணிகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்கள்  150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.