மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை – முதல்வர் மு.க ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று கலந்தாலோசனையில் ஈடுபட்டார்.

ஆட்சியர்கள் உடனான ஆலோசனையில் முதல்வர் அறிவுரை:

கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்குமாறு ஆட்சியர்கள் பணியற்ற வேண்டும். தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு பொருட்கள் சுத்தமாக தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றி சிறப்பான ஆட்சி வழங்க ஒத்துழையுங்கள்.

வளரும் வாய்ப்புகள் – வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி, குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்! உயர்தர ஊரகக் கட்டமைப்பு உயர்ந்த வாழ்க்கைத் தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் ஆகிய 7 இலக்குகளை பத்தாண்டு காலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அவசியம் என கூறினார்.