அறிந்து கொள்வோம் வாழைப்பழத்தின் பயன்களை

அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வாழைப்பழத்தில் பல நன்மைகள் நிறைந்து உள்ளது. இப்பழத்தை பற்றிய சில பயனுள்ள தகவல்களை காண்போம்.

 • எல்லாக் காலங்களிலும், எல்லா பகுதிகளிலும் எளிய வழியில் கிடைக்கக் கூடியது.
 • வாழைப்பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் நார்ச்சத்துகளும்   நிறைந்துள்ளது.
 • வைட்டமின் மற்றும் தாதுச் சத்துக்களான பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ் போன்றவை நிறைந்துள்ளன.
 • அல்சர் நோய் உள்ளவர்கள் காலை உணவை சாப்பிடுவதற்கு முன்னர் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் அல்சர் குணமாகும்.
 • காலை நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதால் சுறுசுறுப்பு, உற்சாகம் ஏற்படும்.
 • பொட்டாசியம் அதிக அளவு நிறைந்து இருப்பதனால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
 • வைட்டமின் ஏ அதிகம் இருப்பதனால் கண் பார்வைக்கு நல்லது.
 • ரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு ரத்த செல்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் அவர்கள் வாழைப்பழத்தை உண்பதால் ரத்த செல்களின் எண்னிக்கை அதிகரிக்கும்.
 • கோவம், வெறுப்பு போன்ற அதிக அளவு உணர்ச்சி உள்ளவர்கள் வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மனநிலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
 • வாழைப்பழம் செரிமானத்திற்கு உதவுகிறது.
 • வாழைப்பழம் மட்டுமல்லாது அதன் பிற பகுதிகளான வாழைப்பூ, வாழைத்தண்டு, காய் மற்றும் அதன் இலைகள் அனைத்தும் உடலுக்கு நனமை தரக்கூடியது.
 • பேயன், ரஸ்தாளி, பச்சை, நாட்டு, மலை, நவரை ,சர்க்கரை ,செவ்வாழை, பூவன், கற்பூர, நேந்திர, கரு, அடுக்கு, வெள்ளை வாழைப்பழம் என பல வகைகள் உள்ளன .
 • உலகளவில் இந்தியா அதிக அளவிலான வாழைப்பழங்களை உற்பத்தி செய்கிறது.