கொரோனா தடுப்பு பொருள்களுக்கான விலை நிர்ணயம்

கொரோனா தடுப்பு பொருள்களுக்கான முக கவசம், கிருமிநாசினி, கையுறை ஆகியவற்றுக்கு விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவை பயன்படுத்தி முக கவசம், சானிடைசர், கையுறைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. அந்த வகையில் 200 மில்லி லிட்டர் அளவு கொண்ட கிருமிநாசினி பாட்டில் 110 ரூபாய்க்கும், ஒரு N95 முக கவசம் 22 ரூபாய்க்கும், கையுறை 15 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வேண்டும்.

அதைப்போல் பாதுகாப்பு கவச உடை (பி.பி.இ கிட்) 223 ரூபாய்க்கும், சர்ஜிகல் மாஸ்க் 4 ரூபாய்க்கும், பேஸ் ஷீல்ட் 21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் உடை அதிகபட்ச விலை 65 ரூபாய் எனவும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரிபார்க்கும் ஆட்சி மீட்டர் 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்