கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளார் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு இன்று (08.07.2021) ஆய்வு செய்தார்.

டாடாபாத் 6வது வீதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை நேரில் பார்வையிட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்திய பின்னர், டாடாபாத் 11வது வீதியில் தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு அலுவலகத்தில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் கண்டறியும் முறைகள் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவினை கண்டறியும் முறைகள், வெப்ப அளவினை கண்டறியப்படும் முறைகள் குறித்து களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.