ஏழைகளை தேடி உதவி வரும் இளைஞர்கள்

கோவையைச் சேர்ந்த ‘ஹியூமானிட்டி ஆஃப் லைப்’ என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றனர்.

இதுகுறித்து தன்னார்வ அமைப்பின் நிறுவனர் சூர்யா கூறுகையில்: கொரோனா முதல் அலையின் போது இந்த அமைப்பை துவங்கினோம். அப்போது 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்களையும், 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறி பொருட்களையும் வழங்கினோம்.

இரண்டாம் அலையின் போது தினமும் 200 பேருக்கு உணவு வழங்கிக் கொண்டிருக்கிறோம். அதோடு 18 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் மக்களுக்கு வழங்கி வருகிறோம். தற்போது எங்கள் அமைப்பில் 150 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த உறுப்பினர்கள் அனைவரும் தங்களால் முயன்ற நிதியை வழங்குவதன் மூலமாக இத்தகைய உதவிகளை செய்ய முடிகிறது..

ஒரு சில நாளில் சிங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 250 மில்லி லிட்டர் பால் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம். என கூறினார்.