நிறுவன மேலாண்மை நடத்தை: கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலைஅறிவியல்மற்றும்ஆராய்ச்சிக் கல்லூரியின் மேலாண்மைத் துறை சார்பில் நிறுவன மேலாண்மை நடத்தை (ORGANIZES CORPORATE LECTURE ON ORGANIZATIONAL BEHAVIOUR “PERCEPTION”) எனும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்குமுதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக, ராமசுப்பிரமணியன் (CHIEF ADMINISTRATIVE OFFICER and SECRETARY, BOARD OF GOVERNORS, IIM-KASHIPUR, Dr.Prof. Captain M. RAMASUBRAMANIAN) கலந்து கொண்டு தமது உரையில் நிறுவன மேலாண்மை நடத்தை குறித்தான செயல் முறைக்கூறுகளை பற்றி விளக்கிக் கூறினார்.

உணர்வின் பின்னணி, இயக்கவியல் உணர்வு, உணர்வு உறுப்புகள், உணர்வு தூண்டுதல், உணர்வை பாதிக்கும் காரணிகள், உணர்வு நிலைகள் பற்றி கூறியதைத் தொடர்ந்து புலனுணர்வு குழுமத்தின் சட்டங்கள், புலனுணர்வு பாதுகாப்பு, சமூகக் கருத்து, பண்புக் கோட்பாடு, பண்புக்கூறு பிழைகள் மேலும் கலாச்சாரம் மற்றும் கருத்துகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

நிறுவன மேலாண்மை நடத்தை குறித்தான இந்நிகழ்வில் துறை சார் பேராசிரியர்கள் மற்றும் மேலாண்மைத் துறை சார்ந்த114 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
.