இலவச முகக்கவசம் வழங்கிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

கோவை வைசால் வீதியில் உள்ள வி.வி.எம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்களுக்கு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆயிரம் முக்கவசங்களை இன்று (02.06.2021) வழங்கினார்.

மேலும், அங்கு கொரோனா நோய் தடுப்பு பணியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி போடும் பணியையும் ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து கெம்பட்டி காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி அங்குள்ளவர்களின் தேவைகளை கேட்டறிந்து அது குறித்து நடவடிக்கைகளை மேற்கோள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.