“12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும்”

பிளஸ் 2 பொது தேர்வு நடத்துவது குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (02.06.2021) தெரிவித்துள்ளர்.

சி.பி.எஸ்.இ 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பொது தேர்வு நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டு, இந்த கருத்துக்களின் அடிப்படையில் தேர்வை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

12 ம் வகுப்பு தேர்வு ரத்து செய்வது குறித்து கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டு அடுத்த 2 நாள்களில் ஆலோசனை மேற்கொண்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துக்களை கூறும் வகையில் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் அறிவிக்கப்படும். தேர்வை விட மாணவர்களின் உடல் நலம் மற்றும் அவர்களின் ஆரோக்கியம் முக்கியம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.