நரம்பு செயற்பாடுகளில் உதவும் களரி கலை – கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும்ஆராய்ச்சிக் கல்லூரியின், உடற்கல்வி துறை மற்றும் Martial Arts Club இணைந்து வழங்கும் (PHYSICAL FITNESS THROUGH KALARIADIMURAI) என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கினார். சிறப்புவிருந்தினராக (Founder, World Federation of KalariAdimurai, Data Scientist, Takeda Pharmaceuticals) ரமேஷ் ரத்தினக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவர்தம் உரையில் களரி குறித்தும், அதன் தொன்மை குறித்தும் விளக்கினார்.

மேலும் களரி கலையை கற்பதன் வழி மனிதன் அடையும் சுயஒழுக்கம், உடற்தகுதி பற்றி விரிவாக எடுத்துரைத்தார். களரி முறை எவ்வாறு மனிதநரம்பு செயற்பாடுகளில் உதவுகிறது என்பதை விளக்கினார். வெளிநாடுகளில் இந்திய கலாச்சாரம், கலைகள், மற்றும் யோகா போன்றவற்றை கற்பதில் ஆர்வத்துடன் செயற்படுகின்றனர் என்பதை விளக்கினார்.

இந்நிகழ்வில் கல்லூரி துறைசார் புல முதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என 115 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.