பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

கோவையில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு செய்தி சேகரிப்பிற்கு செல்லும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு மையத்தில் பணியாற்ற இருக்கும் அரசு ஊழியர்கள் மையத்துக்குள் இருக்கக்கூடிய கட்சி முகவர்கள், காவலர்கள் மற்றும் இதர பத்திரிகையாளர்கள் என  அனைவரும் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும் அல்லது முதல் கட்ட தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பணியாற்ற இருக்கக்கூடிய அரசு பணியாளர்கள், கட்சி முகவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக கோவையில்  வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லக்கூடிய பத்திரிகையாளர்களுக்கு சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில்,  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவையில் உள்ள 10 தொகுதிகளில் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரியில் உள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், அங்கு சென்று செய்திகளைச் சேகரிக்க, செல்லும் அனைத்து செய்தியாளர்கள்  அனைவருக்கும் கொரனோ பரிசோதனை செய்தற்கான சான்றிதழ் காட்டினால் மட்டுமே கல்லூரி வளாகத்திற்குள் தேர்தல்ஆணையம் அவர்களை செல்ல அனுமதிக்கும் என்று அறிவுறுத்தி உள்ளது.