ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் அஸ்வின் 

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடும் அஸ்வின் ஐ.பி.எல் தொடரிலிருந்து தற்காலிகமாக  விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த  ஐபிஎல் சீசனில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், கொரோனா பரவலின் காரணமாக குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் விலகுவதாக அறிவித்துள்ளார்.சூழல் சரியான பிறகு மீண்டும் அணிக்கு வருவேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில்   பதிவிட்ட அஸ்வின் “ 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம். அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன் . நன்றி டெல்லி கேபிடல்ஸ்” எனத் தெரிவித்துள்ளார்.