கோவையில் செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து செய்தியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கோவை மாவட்டம் கொரோனா தொற்று பாதிப்பில் முதல் மூன்று இடங்களில் உள்ள நிலையில் இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் பணிபுரியும் தனியார் இணையதள செய்தியாளர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து செய்தியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.