உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருக்கவே விரும்புகிறேன் – கமல்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் அப்பகுதியில் இன்று (28.3.2021) பிரச்சாரம் மேற்கொண்டார்

பிரச்சாரத்தில், கோவை தெற்கு தொகுதியின் முகமாக நான் இருப்பேன் எனவும், கட்சி தொடங்கிய புதிதில் வீதிக்கு ஒரு நபர் எனது கட்சியிலிருந்து இருக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இப்போது வீட்டிற்கு ஒரு நபர் இருக்கிறார்கள் என்று கூறினார்.

ஒவ்வொரு வார்டிலும் எம் எல் ஏ வின் அலுவலகம் அமைக்கப்படுவதன் மூலம்  மக்களின் பிரச்சனைகளை   நான் எளிதாக அறிந்து கொள்ள முடியும். நான் எப்போதும் மக்களின் இதயத்தில் இருக்கிறேன்.

நான் சினிமா நட்சத்திரமாக இருப்பது பெரிதல்ல, உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருக்கவே நான்  விரும்புகிறேன் அதற்கான வாய்ப்பளித்தால்,   10 வருடகாலமாக செய்யாமல் இருப்பதை நான் வெற்றி பெற்றால் 100 நாட்கள் செய்து காட்டுகிறேன்.

மேலும், இந்தியாவின் மாபெரும் நகரமாக கோவையை மாற்ற ஒரு எம்.எல்.ஏ போதும் பிரதமர் தேவையில்லை என்றார்.