எடுத்த காரியத்தை முடிக்க கூடியவர் வானதி சீனிவாசன் – ஜி.கே.வாசன் புகழாரம்

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா. ஜ .க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து கோவை தெப்பகுளம் மைதானத்தில் தமாகா தலைவர் ஜிகே வாசன் இன்று (28.3.2021) பிரசாரம் மேற்கொண்டார்.

வானதி சீனிவாசனை ஆதரித்து ஜி.கே. வாசன் பேசியதாவது:

பொதுவாழ்வில் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து, படிப்படியாக கடின உழைப்பால் மாநில அளவில் உறுப்பில் இருந்தவருக்கு தேசிய அளவிலான பொறுப்பை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்.

சமூக சேவை, கட்சிக்கான தொடர்புடைய நல்ல வழக்கறிஞர், பேச்சாளர், நாகரிகமான அரசியல்வாதி, தெளிவான சிந்தனையாளர், தான் எடுத்த காரியத்தை முடிக்க கூடியவராக வானதி சீனிவாசன் தமிழகத்தில் அவர் திகழ்கிறார்.

தொகுதி நிலைமைகளை உணர்ந்து, உங்களது பிரச்சினைகளை அறிந்து அதற்கேற்றவாறு சட்டமன்றத்திலே பேசி பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியவர் .மேலும் அவர் வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கு 100 சதவீதம் மத்திய மாநில அரசினுடைய திட்டங்கள் வந்து சேரும்.

மகளிர் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் மத்திய மாநில அரசுகள் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.   என்று கூறினார்.

இப்பிரச்சாரத்தில் கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.