கே.பி.ஆர் கல்லூரியில் பொருளாதார நிதிக்கல்வி  பயிலரங்கம் 

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறை நடத்திய ஐந்து நாள் பொருளாதார நிதிக் கல்வி பட்டறை (22.3.2021முதல் 26.3.2021)நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் பாலுசாமி  மாணவர்களிடம் பேசும்போது:

பொருளாதார நிதிநிலைமை குறித்தான இன்றியமையா கூறுகளையும்,  நிதிபாதுகாப்பு மற்றும் பரிமாற்ற வாரியம், பொருளாதார திட்டமிடல், சேமிப்பு மற்றும் சேமிப்பு தொடர்பான தயாரிப்புகள், முதலீடுகள் மற்றும் காப்பீடு தொடர்பான தயாரிப்புகளின் பாதுகாப்புகள் பற்றி விரிவான விளக்கங்களை எடுத்துக்கூறினார்.

மேலும், ஓய்வூதியம், ஓய்வூதியத்திட்டமிடல்,அரசாங்கக் கடன் திட்டங்கள், வரிசேமிப்பு பாதுகாப்பு மற்றும் இந்திய பரிமாற்ற வாரியம் தொடர்பான பல்வகைப்பட்ட பொருளதார வளர்ச்சி தொடர்பான செய்திகள் அறிந்து  கொள்ளும் வகையில் இந்த அமர்வு நடைபெற்றது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வணிகவியல் துறை முதலாம்ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, வகுப்பு வாரியாக அமர்வுகள் நடைபெற்றது. பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.