கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகை சுகாசினி வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்திற்கு பல்வேறு நட்சத்திரங்கள் வருகின்ற நிலையில் கமல்ஹாசனின் அண்ணன் மகளான நடிகை சுகாசினி இன்று கோவையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார். பந்தய சாலை அருகே நடைபயிற்சி மேற்கொள்ளும் இடங்களிலும், காலை வாக்கிங் சென்றவர்களிடமும் நடிகை சுகாசினி வாக்குகளை சேகரித்தார். கமல்ஹாசன் வெற்றி பெறச்செய்ய வாக்காளர்களின் வீடுகளிலும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கின்றார்.