சிறு குறு வியாபாரத்திற்கு அரசு நிதி – சுயேட்சை வேட்பாளர்

கோவை தெற்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் கேஸ் (Gas) தண்டபாணி இன்று (27.3.2021) பொதுமக்களிடம் பிரச்சாரத்தில்    ஈடுபட்டார்.

தண்டபாணி, காந்திபுரம்,சுற்று வட்டார பகுதிகளில், சிலிண்டர்  சப்ளை செய்து வருகிறார்.  கேஸ் தண்டபாணி என அறியப்படும் இவர்,  சிலிண்டர் சப்ளை செய்ய செல்லும் பகுதிகளில்  நடைபெறும், பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முனைப்புடன் செயல்படுபவர்.

சமூக சேவையில் ஆர்வமுமுள்ள இவர், ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ள தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் இவர் சிலிண்டரையே சின்னமாக பெற்றுள்ளார்.

தண்டபாணி கூறுகையில்:

சிறு குறு வியாபாரத்திற்கு அரசு நிதி பெற்றுத் தருதல், மதுக்கடைகளை மூட ஏற்பாடு செய்தல் அல்லது நேரம் குறைக்க செய்தல், படித்தவர்கள் படிக்காதவர்கள் ஆண் பெண் என அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தருவது, ஒவ்வொரு மாதமும் மருத்துவ முகாம் நடத்துவது, மொபைல் டாய்லெட் வசதி செய்து தருதல் என தான் வெற்றி பெற்றால் பொதுமக்கள் நலன் சார்ந்து செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.