16,800 கோடி, வணிக வளர்ச்சியில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்

இந்தியாவின் மாபெரும் பொதுக் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஒன்பது மாத காலத்தில் 20 சதவீத வணிக வளர்ச்சியை எட்டியுள்ளது என இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜி.சீனிவாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில்:கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ.14000 கோடியாக இருந்த வணிகம் இந்த ஆண்டில் ரூ.16,800 கோடியாக உயர்ந்துள்ளது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான இந்திய அளவிலான வணிகம் 26 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. பொதுமக்களிடையே காப்பீட்டுத் திட்டங்களை வாங்கும் அளவு அதிகரித்துள்ளதன் காரணமாக இன்னும் சில காலத்துக்கு மேலும் கூடுதலான வணிக வளர்ச்சியை எட்ட முடியும்.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சில நாட்களுக்கு முன்பு, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மூன்று லட்சம் கோடி வணிக மதிப்புள்ள காப்பீட்டுத் திட்டமொன்றை வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் நான்கு கோடி பொதுமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தையும், இந்நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கான பிரிமியம் தொகை ரூ.1200 கோடியாகும் வாடிக்கையாளர்களின் மேலான ஒத்துழைப்பின் காரணமாக இந்நிறுவனம் பொதுக் காப்பீட்டு துறையின் பல்வேறு பிரிவிகளிலும் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. இந்தியாவின் பெரும்பாலான விமானப் போக்குவரத்து நிறுவனங்களை காப்பீட்டு செய்துள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் சமீபத்தில் டெக்கான ஏவியேஷன் நிறுவனத்தையும் காப்பீடு செய்திருக்கிறது.

இந்தியாவில் இப்போது அத்தகைய 1400 நுண்கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது இந்நிறுவனம் தன் மொத்த வணிக அளவில் 15 சதவீதம் வணிகம் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளின் வாயிலாகவே ஈட்டி வருகிறது. எதிர்வரும் காலத்தில் இந்த வணிக அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது.