ரத்த அழுத்தத்தினால் இளம் காவலர் பலி

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 24 வயது இளம் காவலர் ரத்த அழுத்தம் காரணமாக  உயிரிழந்தார்.

போலீஸ் தரப்பில் இது பற்றி கூறியதாவது: உயிரிழந்த தங்கதுரை கோவை மாநகர செல்வபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.  கடந்த மாதம் 6ம் தேதி காலை வழக்கம் போல பணிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காவல் நிலையம் அருகே வரும் போது மயங்கி திடீரென கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது டாக்டர்கள் இவருக்கு அளவுக்கு அதிகமான இரத்த அழுத்தம் இருப்பதன் காரணமாக, மூளைக்கு செல்லக்கூடிய நரம்பில் ரத்தம் உறைந்து உள்ளதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இடதுபுறம் ஒரு கை மற்றும் ஒரு கால் செயல் இருந்ததாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில்  அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ் இன்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.