மக்கள் சேவை மையம் நடத்தும் கட்டுரைப் போட்டி

கோவை மக்கள் சேவை மையம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியை நடத்துகிறது. இந்த கட்டுரை போட்டியில் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் அல்லது தங்களது பகுதியை மேலும் மேம்படுத்த ஆலோசனைகள் என்ற தலைப்புகளில் நடத்தப்படுகிறது. இதில் 15 வயது முதல் 24 வயதுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ளலாம்.

இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் ஏ4 தாளில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் சொந்தமாக கட்டுரை எழுதி பிப்ரவரி 20தேதிக்குள் அனுப்ப வேண்டும். விரும்புவோர் பிரச்சனைகளின் புகைப்படங்களையும் இணைக்கலாம்.

கட்டுரைகளை கோவை மக்கள் சேவை மையம், 392, 2வது மாடி, சாய் டவர், கற்பகம் வளாகம் எதிரில், 100 அடி சாலை, கோவை – 641012 என்ற முகவரியில் அனுப்ப வேண்டும்.

மேலும், கட்டுரையுடன் மாணவர் என்பதற்கான அடையாள அட்டையின் ஜெராக்ஸ் பிரதி மற்றும் முழு சுய விபரக்குறிப்பும் முகவரியுடன் இணைக்கப்பட வேண்டும். கட்டுரைகளை நேரிலோ அல்லது தபால் மூலமோ மட்டுமே அனுப்பவேண்டும்.

இப்போட்டிக்கு முதல் பரிசு 10,000, இரண்டாம் பரிசு 5,000, மூன்றாம் பரிசு 3,000, சிறப்புப் பரிசு 2,000. கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் ‘கோயம்புத்தூர் ஹெரிட்டேஜ் டூர்’ பரிசாக அளிக்கப்படும்.

கூடுதல் விபரங்களுக்கு: 86755 55666, 0422-4379903