கே.பி.ஆர் மினி மராத்தன் 2017

 

கே.பி.ஆர் கல்லூரியின் சார்பில் உடல் நலம் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சிறந்த உடல் நலமே சிறந்த வாழ்வு என்ற தலைப்பில் மினி மராத்தன் இன்று (26.11.2017) நடைப்பெற்றது.

இந்த மராத்தான் ஆண்கள் மற்றும் 10, 12ம் வகுப்பு மாாணவர்களுக்கு 8 கி.மீ. தூரமும், பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் 5 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 5 கி.மீ பிரிவில் மராத்தான் ஒட்டத்தை கல்லூரியின் முதல்வர் கே.பொம்மண்ணராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் நிகழ்ச்சியி மராத்தனில் சுமார் 7500 பேர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக இந்திய கைப்பந்து அணியின் கேப்டன் வைஷ்ணவ் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.