கே.எம்.சி.எச் மருத்துவமனையில் மின்னலைகள் மூலம் இதயத் துடிப்பை சீராக்கும் அதிநவீன ஆய்வகம் துவக்கம்!

எலெக்ட்ரோபிசியோலஜி (Electrophysiology) என்பது இதய மின்னோட்ட முறையில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்யும் (arrhythmias) தொடர்பான இதயச் சிகிச்சையின் ஒரு பிரிவாகும்.  இந்நோயினால் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் இதயம் மிக வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ, துடிக்கலாம். இவ்வகையான துடிப்பிற்கு சிகிச்சையளிக்காமல் விடப்பட்டால் இதயத்தின் சீரற்ற துடிப்பின் விளைவாக மயக்கம், மூச்சுத் திணறல், சில சமயத்தில் மரணமும்கூட ஏற்பட வாய்ப்புண்டு.  இவ்வகை நோய்கள் (arrhythmias) “சீரற்ற இதயத் துடிப்புக் கோளாறுகள்” என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இன்றைய அதிவேக வாழ்க்கை முறையினால், இதயத் துடிப்புக் கோளாறுகளும் வேகமாக அதிகரித்துவருகின்றன.

எனவேதான், கே.எம்.சி.எச் இதயசிகிச்சை மையம் இவ்வகை நோய்களுக்காக, தனிப் பிரிவை தொடங்கி, நோயாளியின் தேவைக்கு ஏற்ப திறமையான மருத்துவர்களையும், துணைமருத்துவப் பணியாளர்களையும் கொண்டுள்ளது. மெதுவான இதயத் துடிப்பைச் (Bradycardia) சரிசெய்வதற்கு, நிரந்தர பேஸ் மேக்கர் கருவி (அதிநவீன எம்.ஆர்.ஐ-செய்யும் வசதி கொண்ட பேஸ் மேக்கர் கருவி) பொருத்தப்படுகிறது. அதிவேக இதயத் துடிப்பைக் கொண்ட (Tachycardia) நோயாளிகளை சோதனை செய்து, அவர்களது தேவையை துல்லியமாகக் கணக்கிட, கதிர்வீச்சு அதிர்வெண் கொண்டு செயல்படும் அதிநவீன முறையும் பின்பற்றப்படுகிறது. சீரான இதயத் துடிப்பை பாதிக்கும் மிகச் சிக்கலான நோய்களையும் கண்டறியும் வகையில் முப்பரிமாணத்துடனான 3D electroanatomic முறை இங்குள்ள எலெக்ட்ரோபிசியோலஜி துறையினால் கையாளப்படுகிறது. தமிழகத்திலேயே மிக அதிக அளவில், சிக்கலான இதய அறுவைச் சிகிச்சைகளையும், மாரடைப்பைத் தவிர்ப்பதற்காக உடலின் உட்பொருத்து கருவிகள் முறையிலான சிகிச்சைகளையும் இந்த மையம் சிறப்பாக செயல்படுத்திவருகிறது.

இங்கு எலெக்ட்ரோபிசியோலஜி துறை (Electrophysiology Department) ஆற்றும் அரும் பணி “இப்போதைய காலத்திற்கு தேவை” என்கிறார் கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி அவர்கள்.  இன்றைய மக்களின் வாழ்க்கை தற்போதைய “வாழ்க்கை முறை நோய்களால்” நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, கே.எம்.சி.எச் மருத்துவமனை நோயாளிகளுக்குத் இக்கால சூழ்நிலைக்கு கேற்ப  சிகிச்சையை அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. அனைத்து நோய்களுமே அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்யப்படவேண்டியவை அல்ல. அறுவைச் சிகிச்சை செய்யாமல் மருந்துக்களினால்  சரிசெய்யக்கூடிய நோய்களும் உள்ளது. இதயத் துடிப்பை சீர்படுத்தினால் போதும், அனைத்துவகை தேவைகளையும் சரியான நேரத்தில் நிறைவேற்ற மின்னுடலியல் துறை (Electrophysiology Department) என்றும் தயாராக உள்ளது எனக்கூறினர்.