பம்ப்-மோட்டார் குறித்த கருத்தரங்கு

கோவை, சீமா(siema) வளாகத்தில் pu-mo-con கருத்தரங்கு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (28.11.17) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பம்ப்-மோட்டார்-கருத்தரங்கு குறித்து கருத்தரங்கின் ஒருக்கிணைப்பாளர் ஜெயகுமார் ராமதாஸ் கூறுகையில்: வருகின்ற டிசம்பர் 7ம் தேதி லீ மெரிடியன் ஹோட்டலில் நடக்கவுள்ள பம்ப்-மோட்டார்-கருத்தரங்கு நிகழ்ச்சி பம்ப், மோட்டார் மற்றும் இதை சார்ந்த துறைகளின் எதிர்பார்ப்பினை மையப்படுத்தி நடத்தவுள்ளன.

மேலும், விவசாயிகளின் நலன் கருதி சோலார் மோட்டார் பம்புகளை காட்சிப்படுத்த உள்ளதாகவும், அதன் பயன் குறித்தும் பேசினார். அதேபோல், இந்த சோலார் மோட்டார் பம்புகளுக்கு அரசு கிட்டத்தட்ட 80% சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே நடக்க இருக்கும் இக்கருத்தரங்கு விவசாயிகளுக்கும், இத்துறை சார்ந்த அனைவருக்கும் மிகவும், பயனுள்ளதாக அமையும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில், சிஐஐ தலைவர் எஸ்.நாராயணன், சீமா(siema) தலைவர் கே.கே.ராஜன், துணைத்தலைவர் வி.கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.