ஆன்லைன் வழியான விளையாட்டு போட்டிகள் துவக்கம்

கொரோனா கால ஊரடங்கால் கடந்த ஆறு மாதமாக அனைத்து சேவைகளும் முடங்கிய நிலையில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் விளையாட்டு வீர்ர்களின் திறனை மீட்கும் விதமாக கோவை ஸ்போட்ஸ் அகாடமியின், சார்பாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், இணையதள வழியாக துவங்க உள்ளதாக ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவர் பரசுராமன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சாய்பாபா கோவில் அருகே உள்ள மகாமுத்ரா வளாகத்தில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் ,  பாதுகாப்பாக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியினை மேற்கொள்வது பற்றி மருத்துவர் கார்த்திகேயன் இணையதள வாயிலாக போட்டியாளர்களிடம் கலந்துரையாடினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பரசுராம், இந்த போட்டிகளில் உலகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள், மற்றும் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள உள்ளதாகவும், விளையாட்டு வீரர்கள் பங்கு கொள்ள முன்பதிவு நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டில், தேசிய அளவில் 15 வீரர்களும், மாநில அளவில் 30 வீரர்களுக்கும் விழாவில் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமியின் செயலாளர்  ஸ்ரீதர், துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.