கொரோனா கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது ஆபத்து : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கொரோனாவை அதிக அளவில் கட்டுப்படுத்திய நாடுகள், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன. ஆனால் கொரோனா தொற்று உள்ள நாடுகளில் விரைவாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவது பேரிழவுக்கான செய்முறையாக மாறிவிடும் என்றார். ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நாடுகள் தொற்று பரவலைத் தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று அவர் கூறினார்.