வேலம்மாள் கல்விக்குழுமம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக வேலம்மாள் கல்விக்குழுமம் சார்பில் ஆன்லைன் மூலம் அவர்களது முதல் மெய்நிகர் கிருஷ்ண ஜெயந்தி விழாவை நேற்று (12.8.2020) மாலை 5 மணிக்கு ஆன்லைன் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை குழந்தைகளிடம் ஊக்குவிப்பதற்கு தூண்டுதலாக இருப்பது இதுபோன்ற பண்டிகைகள்தான். இந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கிருஷ்ணரின் பக்தரான  ‌‌ஸ்ரீவிட்டல் தாஸ் மகாராஜ் அவர்களின் அருளுரை மற்றும் பாடல்கள் பாடப்பட்டது, இது பார்வையாளர்களிடையே மிகுந்த பக்தி உணர்வைத் தூண்டியது.

மேலும், ராதா மற்றும் கிருஷ்ணர் வேடம் அணிந்த அனைத்து குழந்தைகளின் முயற்சியையும் சமூக ஆர்வலர் சுமங்கலா ஸ்ரீஹரி பாராட்டினார். பின்னர், கிருஷ்ணரின் லீலைகள் அனிமேஷன் படமும் மற்றும் அவரின் பிறப்பு பற்றிய பொம்மை நிகழ்ச்சியும் (பப்பட் நிகழ்ச்சி) 10000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் மனதை கவர்ந்தது.