கோவையில் புதிதாக 112 பேருக்கு கொரோனா உறுதி

கோவையில் பெண் மருத்துவர் உள்பட 112 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை 5 ஆயிரத்து 805 ஆகவும், பலி எண்ணிக்கை 105 ஆகவும் உயர்ந்துள்ளது.

கோவை, ஜி.வி.ரெசிடென்சியை சேர்ந்த 41 வயது பெண் மருத்துவர், ரயில்வே குடியிருப்பை சேர்ந்த 70 வயது முதியவர், சூலூரை சேர்ந்த 8 பேர், குனியமுத்தூரை சேர்ந்த 5 பேர் ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தலா 4 பேர் உள்பட 112 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 67 வயது மூதாட்டி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கோவையை சேர்ந்த 67, 70 வயது மூதாட்டி இருவர், மற்றும் 56 வயது ஆண் உட்பட 4 பேர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.