கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செப்டம்பர் இறுதியில் தயாராகிவிடும்

– இந்திய ஆராய்ச்சி நிறுவனம்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக பல நாடுகளும், பல நிறுவனங்களும் தீவிர முயற்சியில் உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 100க்கும் அதிகமான தடுப்பூசிகள் தற்போது ஆராய்ச்சில் உள்ளதாகத் தெரிகிறது. புனேவைச் சேர்ந்த செரும் என்ற நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த ஆய்வு மையத்தின் தலைவர் பூணம்வாலா, தங்களது தடுப்பூசி மனிதர்களிடம் செலுத்தப்பட்டு ஆய்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இறுதி செய்யப்பட்டு, செப்டம்பர் மாத இறுதியில் தயாராகிவிடும் என்றார். மேலும், மருந்தின் விலை சுமார் ஆயிரம் ரூபாய் இருக்கும் என்றும் தெரிவித்தார்.