கொரோனா வைரஸ் தடுப்பு முறைகள் விழிப்புணர்வு

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கலை உயிரி தொழில்நுட்பவியல் துறையில் புதுடெல்லியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நட்சத்திர கல்லூரி திட்டத்தின் கீழ் “ஐந்து மொழிகளில் கோவிட் -19 கொரோனா வைரஸிலிருந்து தடுப்பு முறைகள்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஒலி நாடாவை உருவாக்கியுள்ளனர்.

இதில், கொரோனா வைரஸ் தன்மை, பாதுகாப்பு முறைகள், பாரம்பரிய உணவு, நோய் எதிர்ப்பு போன்ற பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் விழிப்புணர்வு பிரச்சார கொள்கைகளையும் , அதன் மகத்துவத்தையும் மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடி பதாகைகள் மூலம் பின்பற்ற வலியுறுத்தினர்.