ஆசிரியர் தின விழா

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இன்று (05.09.17) ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பிஎஸ்ஜி கல்விக் குழுமத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் படியாக, பிஎஸ்ஜி பள்ளி, கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்கான விருதுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக ஆரோக்கியா சித்த மருத்துவமனை மருத்துவர் சிவராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.