“கொலு பொம்மைகள் ” சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை

தமிழ்நாடு அரசு நிறுவனமான, பூம்புகாரில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்காலங்களில்  பல கண்காட்சிகளை நடத்தி வருவதைப் போல இந்த ஆண்டும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு “கொலு பொம்மைகள் ” சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை இன்று (04.09.2017) கோவை, மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு, துணை ஆணையாளர், S.லட்சுமி,I.P.S, அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இக்கண்காட்சி 04.09.2017 முதல் 07.10.2017 வரை தினசரி  காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பெரிய கடைவீதி, பூம்புகார் விற்பனை நிலையத்தில் நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் மரபாச்சி பொம்மைகள் அஷ்டலக்ஷ்மி, தசாவதாரம், ராமர்செட், கல்யாணசெட், கடோத்கஜன் செட், பக்த பிரகலாத பட்டாபிஷேக செட், கிரிக்கெட் செட், கிருஷ்ணலீலை செட், கோபியர் செட், உரியடி, ஜல கிரீடை, ரங்கமன்னார், உலகலந்த பெருமாள், ராகு கேது செட், காவடி செட்,  பார்க் செட், உழவன் செட், லக்ஷ்மி நரசிம்ஹர் செட், ஆழ்வார் செட், கஜேந்திர மோக்ஷம், ஆறுபடை வீடு, தக்ஷிணாமூர்த்தி, காமாக்ஷி பூஜை, கிணறு செட், சிங்கராஜா, ஔவையார், பொய்கால் குதிரை செட், குருவாயூரப்பன், கச்சேரி செட், கீதோபதேசம், கோவில் மற்றும் வீடு மாதிரிகள், கொலு அலங்கார பொருட்கள், கொலு படிகள், பரிசு பொருட்கள் மற்றும் கொலு அமைக்க தேவையான பொருட்கள் மற்றும் ஏராளமானவை விற்பனைக்கு உள்ளன.

இக்கண்காட்சியில் பல விதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவிகிதம் சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.