இந்துஸ்தான் மருத்துவமனையை கொரோனா சிகிச்சைக்கு வழங்கல்

கோவை இந்துஸ்தான் குழுமத்தின் ஒன்றான மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட இந்துஸ்தான் மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக முழுமையாக அரசிடம் ஒப்படைக்கும் விருப்பக் கடிதத்தினை இந்துஸ்தான் நிறுவனங்களின் தலைவர் டி.எஸ்.ஆர். கண்ணையன் மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் வழங்கினார்.