குமரகுரு  கல்லூரியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.  பாலசுப்ரமணியம், தாளாளர், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி  மற்றும் குமரகுரு சுவாமிகள் இவ்விழாவை துவங்கிவைத்தனர். டாக்டர்.கிருஷ்ணராஜ் வானவராயர், தலைவர், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வரவேற்புரை ஆற்றினார். அவர் தமது உரையில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் பற்றியும், ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்றும்  விரிவாக எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் ‘Teacher I Admire’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் குமரகுரு கல்லூரியின் ஆசிரியர்கள் தங்களின் வாழ்க்கையில் முன்மாதிரியாக திகழ்ந்தவர்களை பற்றி விரிவாக கூறியுள்ளனர். மேலும் டாக்டர். மஹாலிங்கம் செஸ் அகாடமியின் இணையதளம் வெளியிடப்பட்டது, வரும் 2017 அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முதல் நவம்பர்  1 ஆம் தேதி வரை அகில இந்திய செஸ் போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில்  நடைபெறுகிறது, அதற்கான அழைப்பையும் வெளியிட்டனர். இதில் வெற்றிபெறுபவர்கள் 2018 ஆம் ஆண்டு நடைபெரும் காமன்வெல்த் போட்டிக்கு தகுதிபெறுவர்.

சிறப்பு விருந்தினர் டாக்டர்.சுப்ரமணியன்,  டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவர் தமது உரையில் தனது ஆசியர்கள் எவ்வாறு தம்மை ஊக்குவித்தனர் என்றும் அதேபோல் தானும் தனது மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாய் இருந்ததையும் பற்றி எடுத்துரைத்தார்.

குமரகுரு கல்லூரியின் 150 ஆசிரியர்களுக்கு, தங்களின் சேவையை போற்றும் வகையில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.