நோ ஃபுட் வேஸ்ட் அமைப்பிற்கு மக்கள் சேவை மையத்தின் சார்பில் புதிய வாகனம்

 

ஆடம்பரம் என்று நினைத்து பலர் பலவிதமாக பணத்தை செலவு செய்கின்றனர். பணம் பரவாயில்லை வேண்டும் என்றால் அச்சிட்டு கொள்ளலாம். ஆனால் பலர், உண்ணும் உணவை ஏராளமாக வீணடிக்கின்றனர். நாம் அன்றாடம் உண்ணும் உணவு ஒரே நா‌ளி‌ல் நாம் தட்டுக்கு வருவதில்லை. ஒரு விதை விதைத்து, அது முளைத்து, விளைந்து, அறுத்து, அடித்து சோறாக வடிக்க 100 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் நாம் அதனை நொடி பொழுதி‌ல் வீணடிக்கிறோம்.

நீங்கள் வீணடிக்கும் உணவின் அளவு கூட இல்லாமல் உலகம் முழுவதும் பலர் தினம் தினம் உயிரிழந்து வருகின்றனர். நாம் வீணடிக்கும் உணவின் அளவை ஒரு வேலைக்கு கூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு உங்களின் உணவை கொடுக்க வேண்டாம். நீங்கள் மீதம் வைக்கும் உணவை அவர்களுக்கு வழங்கலாம். அதையும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை. அதற்காக நோ ஃபுட் வேஸ்ட் என்ற ஒரு தனி சமூக அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்கள் எங்கு உணவு வீணாகிறதோ அங்கு நேரடியாக சென்று அதனை பெற்று, உணவில்லாமல் இருப்போருக்கு வழங்கி விடுவார்கள். இப்பணிக்கு வலுசேர்க்கும் விதமாக கோவை மக்கள் சேவை மையம் சார்பில் தலைவர் வானதி சீனிவாசன் நோ ஃபுட் வேஸ்ட் அமைப்பின் நிறுவனர் பத்மனாபன் கோபாலனுக்கு உணவு சேகரிக்க நான்கு சக்கர வாகனம் ஒன்றை இலவசமாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை இயக்குனர் கவிதாசன், இன்னவேட்டிவ் சர்விஸ் நிறுவனர் வெங்கடேஷ் நாராயணசாமி ஆகியோரும் நோ ஃபுட் வேஸ்ட் அமைப்பின் உறுப்பினர்களும், மக்கள் சேவை மையத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.