ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்ற ராமகிருஷ்ணா பள்ளி

திருநெல்வேலியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான ஆறாவது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கோப்பைக்கான இறுதிப் போட்டியில் கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆவாரம் பாளையம், அணியானது சென்னை லேடி ஆண்டாள் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது. முன்னதாக ஆடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி 141/6 என்ற வீதத்தில் ரன் எடுத்தது. பின்னர் ஆடிய லேடி ஆண்டாள் அணி 7 வீரர்களை இழந்து 128 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி கோப்பையைக் கைப்பற்றியது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா அணியைச் சேர்ந்த வி.ஸ்ரீராம் ஈஸ்வர் ஆட்ட நாயகன் விருதும், எஸ். ஹர்ஜித் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். சிறந்த பேட்ஸ்மேனாக ஜி.சுசில், சிறந்த பந்துவீச்சாளராக ஆரவ் அகுஜா (ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.